தர்பார் படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க திட்டம்..!!

share on:
Classic

தர்பார் படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘பேட்ட’  படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். ரஜினியின் 167-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது .

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார் மேலும் இந்த படத்தில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.  தர்பார் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்தின் மொத்த படப்பிடிப்பும் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுருப்பதாக தர்பார் படத்தின் இயக்குனரான ஏ. ஆர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan