சிபிராஜ் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கிய..!!

share on:
Classic

தரணிதரன் இயக்கத்தில் சிபிராஜ்  நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வரவேண்டுமென்று போராடி வருபவர்களில் ஒருவர் தான் நடிகர் சிபிராஜ். கடைசியாக ‘கட்டப்பாவ காணோம்’, ‘சத்யா’ போன்ற படங்களில் நடித்திருந்த இவருக்கு அந்த படங்கள் கைகொடுக்கவில்லை.  இப்போது சிபிராஜ் டி.எல்.வினோத் இயக்கத்தில் ‘ரங்கா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நிகிலா விமல் நடிக்கின்றார். மேலும் இந்த படத்தில் காமெடி நடிகர் சதீஷ் நடித்து வருகின்றார். இந்த படத்தின் வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சிபிராஜ் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.  

தரணிதரன் இயக்கத்தில் அவ்ரா சினிமா தயாரிப்பில் இந்த படம் உருவாகிறது.  தரணிதரன்,ஏற்கனவே சிபிராஜை வைத்து ஜாக்சன் துரை என்ற படத்தை இயக்கியிருந்தார்.  மேலும்  இந்த படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றியும் டைட்டில் பற்றியுமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. 
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan