மெரினா கடற்கரையில் புதிய உரிமத்துடன் கடைகளுக்கு அனுமதி?

share on:
Classic

மெரினா கடற்கரையில் உள்ள 2000 கடைகளை அப்புறப்படுத்தி விட்டு, புதிய உரிமத்துடன் குறைவான கடைகளுக்கு அனுமதி வழங்கலாம் என சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஆழ்கடலில் மீன் பிடிப்பது தொடர்பான மத்திய அரசின் புதிய விதிமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் வினித் கோத்தாரி, அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு மற்றும் தூய்மை பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது, மெரினா கடற்கரையில் உள்ள சுமார் 2000 கடைகள் முறையான உரிமம் பெறாமல் இயங்கி வருவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த அனைத்து கடைகளையும் அப்புறப்படுத்திவிட்டு, புதிய உரிமத்துடன் குறைவான கடைகளுக்கு அனுமதி வழங்கலாம் என மாநகராட்சிக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும், மெரினாவை ஒழுங்குமுறைப் படுத்துவதற்கான வரைவு அறிக்கையை, வரும் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

News Counter: 
100
Loading...

sasikanth