"தளபதி63" திருட்டு கதையா..? உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு..!

share on:
Classic

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் "தளபதி63" படத்தின் கதை தன்னுடையது என குறுப்பட இயக்குனர் செல்வா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இயக்குனர் அட்லீ, நடிகர் விஜய் கூட்டணியில் "தளபதி63" என்ற திரைப்படம், பிரமாண்ட கால் பந்தாட்ட மைதானம் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய், பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடிக்கிறார். 

இந்நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என்றும் கால் பந்தாட்டத்தை மையமாக வைத்து, 256 பக்கங்கள் கொண்ட கதையை  தயார் செய்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து, சில படத்தயாரிப்பு நிறுவனங்களிடம் கதை சொல்லி இருந்ததாகவும், இயக்குனர் செல்வா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வரும் 23 ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan