ஜனவரி 31 வரை தொலைக்காட்சி சேனல்களை துண்டிக்கக் கூடாது... டிராய் எச்சரிக்கை

share on:
Classic

ஜனவரி 31-ஆம் தேதி தொலைக்காட்சி சேனல்களின் சேவையை துண்டிக்கக்கூடாது என கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு டிராய் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹாத்வே (Hathway) நிறுவனத்தின் சலுகை:

சேனல்களை தேர்வு செய்வதற்கான டிராய் அமைப்பின் புதிய விதிமுறைகளுக்கு பிறகு முக்கிய டிடிஹெச் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன. ஹாத்வே நிறுவனம் அடிப்படை சேனல்களுக்கான சேவையை ரூ.100-ல் இருந்து தொடங்குகிறது. இதில் அனைத்து இலவச சேனல்களும் அடங்கும். இதேபோல மாதத்திற்கு ரூ.42.7 செலுத்தி ஆங்கில திரைப்பட சேனல்களின் தொகுப்பு, விளையாட்டு சேனல்களின் தொகுப்பு ஆகியவற்றுடன் 7 பிரபல சேனல்களையும் காண முடியும். வாடிக்கையாளரை கவரும் வகையில் இந்த தொகுப்பினை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஏர்டெல் காம்போ தொகுப்பு:

ஏர்டெல் டிடிஹெச் நிறுவனம் பல்வேறு காம்போ சேனல்களின் தொகுப்புகளையும், சிறப்பு சலுகைகளையும் அறிவித்துள்ளது. முன்னணி சேனல்களான சோனி, ஸ்டார் ப்ளஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜீ சினிமா ஆகியவற்றின் தொகுப்புகளை ரூ. 20-க்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. தூர்தர்ஷன், 9.எக்ஸ்.எம்(9xm), பி4யு (B4U) உள்ளிட்ட இலவச சேனல்களும் அடங்கும். இதேபோல டிஷ் டிவி நிறுவனமும் அதன் இணையதளத்தில் சேனல்களுக்கான விலை விவரங்களை வெளியிட்டுள்ளது.

 

டிராய் எச்சரிக்கை:

தற்போது வாடிக்கையாளர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் சேனல்கள் அனைத்தும் ஜனவரி-31ஆம் தேதி வரை எவ்வித தடையுமின்றி தொடரும் என்று டிராய் ஏற்கனவே தெரிவித்துள்ளது. மேலும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களோ, டிடிஹெச் சேவை வழங்கும் நிறுவனமோ சேவையை துண்டிக்கக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிய விதிமுறைப்படி ஜனவரி-31க்குள் சேனல்களை தேர்வு செய்துகொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
 

News Counter: 
100
Loading...

aravind