சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது..எச்சரிக்கும் தேர்தல் ஆணையம்..!

share on:
Classic

தேர்தல் பிரச்சாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்த கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை அமல்படுத்த இடதுசாரி அமைப்புகள் மும்முரமாக இருந்தனர். இந்த விவகாரத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், பாஜகவுக்கும் பெரும் மோதல் வெடித்தது. இதனால் சபரிமலை பகுதிகளில் 144 தடை பிறக்கப்பட்டிருந்தது. இந்த பிரச்சனை சற்று தனிந்து வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் சபரிமலை விவகாரத்தை அரசியல் கட்சிகள் பயன்படுத்த இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.

இதையடுத்து, மத உணர்வுகளை தூண்டிவிடுவது, மதத்தின் பெயரால் வாக்கு சேகரிப்பது தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகும். எனவே பிரச்சாரத்தில் சபரிமலை விவகாரத்தை பேசக்கூடாது என அரசியல் கட்சிகளுக்கு அம்மாநில தேர்தல் அதிகாரி தீகா ராம் அறிவுறுத்தியுள்ளார். இதனை மீறி பிரச்சாரத்தில் சபரிமலை விவகாரத்தை பேசி மத உணர்வுகளை தூண்டிவிட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் தீகா ராம் எச்சரித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

sajeev