விசாவுக்காக திருமணம் செய்துகொண்ட அண்ணன் தங்கை..!!

share on:
Classic

ஆஸ்திரேலிய விசாவுக்காக பஞ்சாபை சேர்ந்த அண்ணன் தங்கை இருவரும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விசாரணையில் மாட்டிய அவர்களுக்கு பின் இதே போன்று நடந்த பல கதைகள் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளன.

வெளிவந்த அதிர்ச்சி :

பஞ்சாபை சேர்ந்த அண்ணன் தங்கை இருவர் ஆஸ்திரேலியா செல்ல முடிவெடுத்தனர். ஆனால் சில காரணங்காளால் அவர்களது விசாக்கள் நிராகரிக்கப்பட்டது. எனவே 'spouse' விசா மூலம் எப்படியாவது  இருவரும் சேர்ந்து ஆஸ்திரேலியா சென்று விடலாம் என்ற கனவில் பதிவு திருமணம் செய்ததாக சான்றிதழ்கள் பெற்றனர். அதனை ஆஸ்திரேலியா குடிவரவு அலுவலகத்தில் சமர்பித்தனர். ஆனால் அவர்கள் மீது சந்தேகம் எழவே அதிகாரிகள் அவர்கள் இருந்த கிராமத்துக்கு சென்று விசாரித்துள்ளனர். விசாரணையில் தான் அவர்கள் இருவரும் அண்ணன் தங்கை என்று உண்மை தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களது விசாக்கள் மறுபடியும் நிராகரிக்கப்பட்டது. 

 

அதே ஊரில் மேலும் 6 ஜோடி :

இன்னும் அதிர்ச்சியான விஷியம் என்னவென்றால் இவர்கள் மட்டும் அல்ல அந்த ஊரை சேர்ந்த மேலும் 6 பொய் ஜோடிகளும் இந்த விசாவை பெற்று வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். கடந்த 2015-2016 ஆம் ஆண்டு மட்டும் இப்படி spouse விசாவின் கீழ் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் எண்ணிக்கை 278 ஆகும் . ஆனால் இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 669 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக இந்த நான்கு ஆண்டுகளில் 1500 போலி விண்ணப்பங்கள்நிராகரிக்க பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

 

News Counter: 
100
Loading...

sankaravadivu