சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு சிவப்பு மஞ்சள் பச்சை என தலைப்பு..!!

share on:
Classic

நடிகர்கள் ஜிவி பிரகாஷ், சித்தார்த் நடிப்பில் பிச்சைக்காரன் படத்தை இயக்கிய சசி இயக்கி வரும் படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு 'சிவப்பு மஞ்சள் பச்சை' என தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் சித்தார்த் டிராபிக் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.  இதனால் சிவப்பு மஞ்சள் பச்சை படம் டிராபிக் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது இந்த டைட்டில் அந்த தகவலை உறுதி செய்துள்ளது.

ரமேஷ் பிள்ளை தயாரித்து வரும் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் இம்மாதத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்து அடுத்த மாதம் முதல் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலை ஆரம்பிக்க இருக்குறதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஒரு விளையாட்டு வீரர் கேரக்டரில் நடித்து வருவதாகவும், ஜிவி பிரகாஷின் சகோதரியை சித்தார்த் காதலிப்பது போன்று இந்த படத்தின் கதை செல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan