‘எக்ஸ்கியூஸ் மி ராட்சசி’ என்ற பாடலை பாடிய சித்தார்த்..!!

share on:
Classic

கமல், விஜய், தனுஷ், சிம்பு என தமிழ் சினிமாவின் பெரும்பாலான நடிகர்கள் படங்களில் பாடல்கள் பாடி வருவது வழக்கம் தான்.

அந்த வகையில் தன்னுடைய படங்களில் மட்டுமில்லாமல் பிற நடிகர்களின் படங்களிலும் பாடல்கள் பாடி வரும் நடிகர் சித்தார்த், இப்போது ஒரு தெலுங்கு படத்திற்கு பாடல் பாடிவருகிறார். நடிகர் சந்தீப் கிஷன் நடித்து வரும் தெலுங்கு படமான ‘நினு வீடனி நீடனு’ என்ற படத்தில் 'எக்ஸ்கியூஸ் மி ராட்சசி' என்ற பாடலை சித்தார்த் பாடியுள்ளார்.

எஸ்.எஸ்.தமன் இசையில் சாம்ராட் வரிகளில் உருவான இந்த பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். தமிழில் 'திருடன் போலீஸ்' படத்தை இயக்கிய கார்த்திக் ராஜூ இயக்கிவரும் இந்த படத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக அனுயாசிங் நடித்துள்ளார். மேலும் இந்த படம் தமிழில் 'கண்ணாடி' என்ற பெயரில் வெளிவரும் என படக்குழு தெரிவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan