முதலமைச்சரிடம் சித்திக் குழு அறிக்கை தாக்கல்

share on:
Classic

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைவதற்கு அமைக்கப்பட்ட சித்திக் குழு தனது அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட 7வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய, நிதித்துறை செயலாளர் சித்திக் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவிடம் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்த கோரிக்கை மனுக்கள் துறை ரீதியாக பிரிக்கப்பட்டு பின்னர் மனு அளித்த சங்கங்களின் உறுப்பினர்களை நேரில் அழைத்து கருத்து கேட்கப்பட்டது. இதன்மூலம் பெறப்பட்ட தகவல்களை ஒருங்கிணைத்து தயார் செய்யப்பட்ட அறிக்கையை சித்திக் தலைமையிலான குழு இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

News Counter: 
100
Loading...

sasikanth