ஆர்யாவுக்கு வில்லனான சிம்பு..!!

share on:
Classic

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் 'காப்பான்' படத்தில் நடிகர் ஆர்யா வில்லன் கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது

இந்நிலையில் சிம்பு & ஆர்யா நடிக்கும் அடுத்த படத்தில் ஆர்யாவுக்கு  வில்லனாக சிம்பு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கன்னட சூப்பர் ஸ்டார் சிவ்ராஜ்குமார், ஸ்ரீமுரளி நடித்த 'மஃப்டி' என்ற திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக   இருப்பதாகவும், இந்த படத்தின் இரண்டு முக்கிய கேரக்டர்களில் சிம்பு மற்றும் ஆர்யா நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிவராஜ்குமார் வேடத்தில் ஆர்யாவும், ஸ்ரீமுரளி கேரக்டரில் சிம்புவும் நடிக்கின்றனர். அதாவது ஆர்யாவுக்கு வில்லனாக சிம்பு நடிப்பதாக தெரிகிறது. ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இந்த படத்தின் மற்றொரு முக்கிய கேரக்டரில் சரத்குமாரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும்.

கன்னடத்தில் 'மஃப்டி' படத்தை இயக்கிய நார்தன், இந்த படத்தையும் இயக்குவார் என்றும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan