"நம்ம ஓடணுமா? இல்ல அத ஓட விடணுமா?" 

share on:
Classic

விஜய்சேதுபதி நடித்துள்ள சிந்துபாத் படத்தின் டீசர் வெளியாகி, சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அருண்குமார் - விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகும் படம் சிந்துபாத். இதில், நாயகியாக அஞ்சலி நடித்துள்ளார். ஆக்ஷன் திரில்லராக தயாராகும் இந்தப் படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கெனவே சிந்துபாத் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது டீசர் வெளியாகியுள்ளது. "நம்ம ஓடணுமா? இல்ல அத ஓட விடணுமா?" என விஜய்சேதுபதியின் கம்பீரக் குரலில் வெளிவந்திருக்கும் இந்த டீசர், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

 

News Counter: 
100
Loading...

sajeev