WWE வீரர் ஜான்சினா மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு... நெட்டிசன்கள் செம்ம கலாய்

Classic

பிரபலங்கள் மீது பாடகி சின்மயி தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருகிறார். Metoo என்ற ஹேஸ்டேக் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். ஹாலிவுட்டில் பிரபலமாக இருந்த இந்த ஹேஸ்டேக், நடிகை தனுஸ்ரீ மூலம் இந்தியாவிலும் பிரபலமடைய தொடங்கியது. 

நடிகை தனுஸ்ரீ Metoo என்ற ஹேஸ்டேக் மூலம் நடிகர் நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். தொடர்ந்து இந்த ஹேஸ்டேகில் இந்திய பிரபலங்கள் பலர் சிக்கினர். தமிழகத்தில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டுகளை இந்த ஹேஸ்டேக் மூலம் வெளியிட்டு வந்தார். பின் நடிகர் ராதாரவி,  நடன இயக்குனர் கல்யாண், பாடகர் கார்த்திக் என லிஸ்டு நீண்டு கொண்டே போனதுது. 

தற்போது அவர் இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா மீது பாலியல் குற்றச்சாட்டு உள்ளதாக டுவிட் ஒன்றை வெளியிட்டார். இந்த டுவிட்டை நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் மூலம் கலாய்த்து வருகின்றனர். அதில் ஒருவர் அடுத்து யாரு wwe வீரர் ஜான்சினாவா என்று நக்கலாக கேள்வி எழுப்பி உள்ளார். 

இதை தொடர்ந்து மற்றொருவர் என்னடா இது யாக்கர் மன்னனுக்கு வந்த சோதனை என்று கலாய்த்துள்ளார். 

மற்றொருவர், ப்ரியங்கா சேப்ரா கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை போட்டு 10 வருடங்கள் கழித்து, ப்ரியங்கா இந்த போட்டோ எடுத்தவர் மீது கூட பாலியல் குற்றச்சாட்டு கொடுக்கலாம் என்று கலாய்த்துள்ளார்.

 

News Counter: 
100

vijay