மிமிக்கிரி கலைஞரை கரம் பிடித்த பாடகி வைக்கம் விஜயலட்சுமி !

share on:
Classic

குக்கூ திரைப்படத்தில் இடம்பெற்ற 'கோடையில மழை போல' என்ற பாடலை சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடி தமிழுக்கு அறிமுகமானவர் பாடகி வைக்கம் விஜயலட்சுமி. மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டாலும், இதுவரை தமிழில் தான் அதிக பாடல்களைப் பாடியிருக்கிறார். 

மாற்றுத் திறனாளியான இவரின் தனித்துவமான குரலுக்கு ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். தமிழில் இவரது இரண்டாவது பாடலான, 'புதிய உலகை' என்ற பாடல் தான் இவரை அனைவருக்கும் அறிமுகப் படுத்தியது. என்னமோ ஏதோ என்ற படத்திற்காக அந்தப் பாடலை இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருந்தார். 

இரண்டு வருடங்களுக்கு முன் விஜய லட்சுமிக்கும், பஹ்ரைனை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நின்று போனது. விஜியின் மாற்றுத் திறனை சுட்டிக் காட்டிய, சந்தோஷ் அவரை மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என தடை விதித்ததன் காரணமாக விஜய லட்சுமியே அந்தத் திருமணத்தை நிறுத்தினார். 

இரண்டாண்டுகள் கழிந்த நிலையில், நேற்று அவருக்கும், மிமிக்கிரி கலைஞர் அனூப் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. தற்போது இந்தத் தம்பதிகளை வாழ்த்தி வருகிறார்கள் ரசிகர்கள்!  
 

News Counter: 
100
Loading...

sankaravadivu