‘சிந்துபாத்’ படம் வரும் மே 16ஆம் தேதி வெளியிடுவதாக தகவல்..!!

share on:
Classic

விஜய் சேதிபதி நடிப்பில் உருவான சிந்துபாத் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் இப்படத்தை வரும் மே 16 ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் `சூப்பர் டீலக்ஸ்'. இப்படத்தை குமாரராஜா தியாகராஜன் இயக்கி இருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து இப்போது ‘சிந்துபாத்’ படத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.
 
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார்.  இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அருண்குமார் - விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைஞ்சு இருக்குற இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை மே 16ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan