காஷ்மீருக்கு செல்ல சீதாராம் யெச்சூரிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி..!!

share on:
Classic

ஜம்மூ-காஷ்மீருக்கு செல்ல சீதாராம் யெச்சூரிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஜம்மூ-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை கடந்த 5 ஆம் தேதி ரத்து செய்தது மத்திய அரசு. மேலும் ஜம்மூ - காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவித்தது. இந்த சட்ட மறுசீரமைப்புக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார். அங்கு வன்முறைகள் நிகழாமல் இருக்க தடை உத்தரவும் பிறபிக்கப்பட்டது. கடந்த 10 நாட்களாக எந்த வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாததால் தடை உத்தரவு படிப்படியாக திரும்பப்பெறப்பட்டது. காஷ்மீர் செல்லவிருந்த சீதாராம் யெச்சூரியை காஷ்மீருக்குள் நுழைய விடாமல் ராணுவப் படையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனை எதிர்த்து சீதாராம் யெச்சூரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி காஷ்மீருக்கு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan