போலீசார் என நாடகமாடி நகை திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது

share on:
Classic

தனியாக நடந்து செல்லும் வயதான பெண்களிடம் காவல்துறை என நாடகமாடி நகைகளை திருடிய கும்பலை ஈரோடு போலீசார் கைது செய்துள்ளனர். 

ஈரோட்டில்  வாகன சோதனையின் போது சந்தேகத்திற்கு இடமாக வந்த காரை மறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், காரில் வந்த 6 பேர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் தனியாக நடந்து செல்லும் வயதான பெண்களிடம்  நகைகளை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து,  6 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 20 சவரன் நகை மற்றும் சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

News Counter: 
100
Loading...

aravind