எஸ்.கே 16 : சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ள துப்பறிவாளன் நாயகி..

share on:
Classic

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக அனு இமானுவேல் இணைந்துள்ளார். 

மிஸ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படம் மூலம் அறிமுகமானவர் அனு இமானுவேல். அதன் பின்னர் தமிழில் எந்த படத்திலும் நடிக்காத அவர், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். அல்லு அர்ஜுனின் நா பேரு சூர்யா என்ற படத்திலும், நாக சைதன்யாவின் ஷைலஜா ரெட்டி என பல்வேறு படங்களில் நடித்தார். 

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் அனு கதாநாயகியாக இணைந்துள்ளார். எஸ்.கே.16 என்று அழைக்கப்படும் இப்படத்தில் இயக்குனர் பாரதி ராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். டி. இமான் இசையமைக்க உள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. 

2012-ல் இயக்குனர் பாண்டிராஜ் மூலம் மெரினா படத்தில் அறிமுகமான சிவகார்த்திகேயன், 7 ஆண்களுக்கு பிறகு மீண்டும் பாண்டிராஜுடன் கை கோர்த்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ramya