கோடை வெயிலால் சருமம் பாதிக்கப்பட்டுள்ளதா..?? உங்களுக்கான சில டிப்ஸ்..!!

share on:
Classic

கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் சருமத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இதற்காக அதிக விலை கொடுத்து அழகு சாதனப்பொருட்கள் வாங்குவதை விட எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்தே சருமத்தை பாதுகாக்க முடியும்.

சருமத்தை பாதுகாக்கும் சில வழிமுறைகளை காண்போம் : 

எலுமிச்சை :
எலுமிச்சை சாறுடன், தேவையான அளவு பன்னீர் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து மை போலக் கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் மாஸ்க் போலப் பூசிக்கொள்ளலாம். இப்படி செய்தால் வெயிலினால் பாதிப்படைந்த உங்கள் சருமம் பளபளக்கும்.

சோற்று கற்றாழை :
சோற்று கற்றாழையின் சாறை எடுத்து கை, கால், முகம், கழுத்து என அனைத்து இடங்களிலும் பூசி வந்தால் சரும பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

தயிர் :
தயிர் ஈரப்பதத்தை அதிகம் தக்க வைக்கும் திறன் கொண்டது. இதை முகத்தில் தடவுவதன் மூலம் முகம் வறண்டு போகாமல் பாதுகாக்கமுடியும்.

உருளை கிழங்கு :
முகத்தின் அழகை பாதிக்கும் கருவளையங்களை போக்கிட கண்களை மூடிக்கொண்டு உருளை கிழங்கு துண்டுகளை கண்களின் மீது வைக்கலாம். 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan