பிரச்சாரத்தில் கமல்ஹாசன் மீது காலணி வீசியதால் பரபரப்பு : தொண்டர்கள் அமைதி காக்க கமல் வேண்டுகோள்..

share on:
Classic

அரவக்குறிச்சி கமல் ஹாசனை நோக்கி  காலணி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

நாதுராம் கோட்சே குறித்த கமலின் கருத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் வலுத்து வருகிறது. இந்நிலையில்,மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அரவசக்குறிச்சிய வேலாயுதம்பாளையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் கமல்ஹாசன் மீது காலணி வீசினார். வீசப்பட்ட காலணியானது, கமல் ஹாசனுக்கு சற்று முன்பாக விழுந்தது. இதைபார்த்த மக்கள் நீதி மய்யக் கட்சி தொண்டர்கள் காலணி வீசிய நபரை தாக்குதல் நடத்த முற்பட்டனர். இதையடுத்து மக்கள் நீதி மய்ய கட்சி தொண்டர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றநிலை நீடித்தது.

இதையடுத்து மக்கள் நீதி மய்யத் தொண்டர்கள் பொறுமை காக்க வேண்டுமென அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக கமல்ஹாசன் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தற்போது நிகழும் சம்பவங்கள், நம் நேர்மைக்கும் பொறுமைக்கும் நடக்கும் அக்னிப் பரிட்சை என்றும் ஆர்ப்பாட்டக் கூட்டம் நம்மை வன்முறைக்கு வலிந்து இழுக்கும் மயங்காதீர்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல், தீவிரவாதம் நேர்மைவாதத்தின் முன் தோற்கும் என பதிலளித்துள்ளார்.
 

News Counter: 
100
Loading...

Ramya