’ஸ்மைலிங் டிப்ரஷன்’ எனும் மனஅழுத்த பாதிப்புக்கான தீர்வுகள்....!!

share on:
Classic

இன்றைய இயந்திர உலகில் நம்மில் பலர் ஸ்மைலிங் டிப்ரஷன் எனும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 சதவீத நோய்கள் மனஅழுத்தத்தினாலேயே ஏற்படுகின்றன என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. தற்போது ஸ்மைலிங் டிப்ரஷன் மற்றும் அதற்கான தீர்வுகளை பற்றியும் பார்க்களாம்.

வெளியே சொல்ல முடியாத மன அழுத்தம் இன்னமும் ஆபத்தானது. உள்ளே அழுதுகொண்டு வெளியே சிரிப்பதுதான் இது. இதனை ’ஸ்மைலிங் டிப்ரஷன்’எனப்படும். தினமும் நாம் அலுவலக வேலை செய்யும்போது இந்த விரும்பத்தகாத எண்ணங்கள் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கும். இந்த கெட்ட எண்ணங்களை நாம் கட்டுப்படுத்த முடியாத நிலையில் நாம் இவற்றுடனே வாழப் பழகிவிடுறோம். 

மன அழுத்தத்திற்கான தீர்வுகள்:
மன் அழுத்தம் சற்று கூடும்பொழுது சிறிது நேரம் அமைதியாய் மூச்சு விட வேண்டும். இதனால் ஒருவரை சற்று அமைதிப்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் உடல் நலம் எந்த விதத்திலும் பாதிக்காது. புகைபிடுத்தல், மது அருந்துதல் கைவிடுதல் மூலமாக மன அழுத்தத்தை போக்க முடியும். தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். மேலும் குழந்தைகளுடன்  விளையாட வேண்டும், இதனால் நம் மனதை சந்தோசமாக வைத்துக்கொள்வதன் மூலம் இந்த பிரச்சனைகளிலிருந்து முற்றிலும் விடுபடலாம்.

News Counter: 
100
Loading...

aravind