தோல்வியின் விளிம்பில் ராகுல்காந்தி...? கொண்டாட்டத்தில் ஸ்மிருதி இராணி

share on:
Classic

அமேதி தொகுதியில் ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி இராணி அதிகப்படியான வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 

உத்தரபிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு உள்ளிட்ட 2 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அமேதி தொகுதியில் ராகுல்காந்தியை எதிர்த்து களமிறங்கியுள்ள பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணியின் கை தற்போது ஓங்கியுள்ளது. வாக்கு எண்ணிக்கையின் சற்று முன்னர் நிலவரப்படி 7,600 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இராணி முன்னிலை பெற்றுள்ளார். இதனால் ராகுல்காந்திக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் ராகுல்காந்தியின் கோட்டையாகக் கருதப்படும் அமேதி தொகுதியானது இப்போது பாஜக வசம் நோக்கி திரும்பியுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராகுல்காந்தியிடம் ஸ்மிருதி இராணி தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

mayakumar