ஸ்மிரிதி ராணியின் நெருங்கிய நண்பர் சுட்டுக்கொலை..!!

share on:
Classic

பாஜக மக்களவை உறுப்பினர் ஸ்மிரிதி ராணியின் நெருங்கிய நண்பர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் ஸ்மிரிதி ராணிக்கு, அவரது நெருங்கிய நண்பரான சுரேந்தர் சிங் பல்வேறு உதவிகளை செய்து வந்ததாக தெரிகிறது. அமேதி தொகுதியில் ஸ்மிரிதி ராணி வெற்றிப் பெற சுரேந்தர் சிங் பிரசாரங்களையும் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், அமேதியில் அடையாளம் தெரியாத இரண்டு பேர் சுரேந்தர் சிங்கை துப்பாக்கியால் சுட்டுள்ளர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சுரேந்தர் சிங், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

vinoth