பெண்களுக்கான கிரிக்கெட் பேட்டிங் தரவரிசைப் பட்டியல்... முதலிடம் பிடித்த இந்திய வீராங்கனை

share on:
Classic

பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். 

பெண்களுக்கான பேட்டிங் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த எல்லிப்ஸ் மற்றும் மெக் லென்னிங் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதலிடத்தை வசப்படுத்தியுள்ளார். இவர் இதுவரை 15 போட்டிகளில் களமிறங்கி 2 சதங்கள் மற்றும் 8 அரைசதங்கள் அடித்துள்ளார். தரவரிசைப் பட்டியலில் 751 புள்ளிகளுடன் ஆதிக்கம் செலுத்துகிறார் ஸ்மிருதி. 

News Counter: 
100
Loading...

aravind