டிக் டாக்குடன் போட்டிபோடும் ஸ்னாப்சேட்.. வந்துவிட்டது லிப்சிங் வீடியோ..!

share on:
Classic

ஸ்னாப்சேட் லிப்சிங் வீடியோ உருவாக்கும் புது அமைப்பை அறிமுகப்படுத்துகியிருக்கிறது.  

பேஸ்பூக் போன்ற சிறப்பம்சங்களை கொண்ட ஸ்னாப்சேட் தன் பயனாளர்களை கவரும் வகையில் புது புது அம்சங்களுடன் களம் இறங்குகிறது. மெசேஜ், போட்டோ வீடியோ பகிர்வது போன்றவற்றால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்னாப்சேட் சில நாட்களுக்கு முன்பு லென்ஸ் பிளாட்பார்ம் எனப்படும் சில தத்துரூபமான உருவங்களுடன் செல்பி வீடியோ எடுக்கும் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. 

இதனை மேம்படுத்தும் வகையிலும் டிக்டாக் செயலிக்கு போட்டியாக லிப்சிங் வீடியோ எடுக்கும் அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் பயனாளர்கள் ஏற்கனவே உள்ள வீடியோக்களுக்கு லிப்சிங் செய்யவும் புதிதாக தாங்களே வீடியோ உருவாக்கி அதனை மற்றவர்களுக்கு சவாலாக கொடுக்கவும் முடியும். இந்த வீடியோ அவர்களது ஸ்டோரி பக்கத்தில் காண்பிக்கப்படும். 

இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு ஸ்னாப்சேட் புதிய அம்சங்களுடன் களமிறங்கி இருப்பது டிக்டாக் போன்ற செயலிகளுக்கு போட்டியாக அமைகிறது. பேஸ்பூக் நிறுவனமும் லெஸ்சோ எனப்படும் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.     

News Counter: 
100
Loading...

sasikanth