பனிமனிதனின் காலடித்தடமா..?புகைப்படத்தை வெளியிட்ட ராணுவம்..!!

share on:
Classic

இமயமலைப் பகுதியில் பனி மனிதனின் காலடித் தடம் இருப்பதாக இந்திய ராணுவம் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

மனிதனைப் போல் உருவம் கொண்ட பனி மனிதன் இமயமலை பிரதேசங்களில் வாழ்ந்து வருவதாக பலரும் நம்பி வருகின்றனர். இது தொடர்பாக ஆதாரங்களை எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை. ஆனால் நேபாள மக்கள் அவர்களை கண்டுள்ளதாக கூறி வருகின்றனர். சாதாரண மனிதர்களை காட்டிலும் பெரிய உருவம் கொண்டவர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பாக எந்த வித ஆதாரமும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்திய ராணுவத்தினர் சார்பில் ட்விட்டர் பக்கத்தில் பனி மனிதனின் காலடித்தடம் எனக் கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளதால் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ராணுவத்தினர் கடந்த 9 ஆம் தேதி திகதி மலையேற்றத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பனிமனிதன் எட்டியின் 32 இன்ச் நீளமும், 15 இன்ச் அகலமும் கண்ட கால் தடம் கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வந்த நிலையில் ஒரு சிலர் இந்திய ராணுவத்தின் ட்விட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்துவிட்டனர் என பதிவிட்டு வருகின்றனர்.

 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan