இலங்கையில் சமூக வலைதளங்கள் மீதான தடை நீக்கம்..!

share on:
Classic

இலங்கையில் 9 நாட்களுக்கு பிறகு சமூகவலைதளங்கள் மீதான தடை தளர்க்கப்பட்டது.

இலங்கையில் ஈஸ்டர் தினமான கடந்த 21 ஆம் தேதி தேவாலயங்களில் உள்ளிட்ட நட்சத்திர விடுதியில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. இதில் 253 பேர் உயிரிழந்தனர் என அதிகாரப்பூர்வமான தரவுகள் தெரிவிக்கப்பட்டன. இந்த தாக்குதலையடுத்து இலங்கையில் நெருக்கடி நிலை, ஊரடங்கு உத்தரவு உள்ளிட்டவைகள் பிரகடனப்படுத்தப்பட்டது.

அதேபோல் கடந்த 21 ஆம் தேதி முதல் சமூகவலைதளங்கள் அனைத்தும் முடக்கிவைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, இன்று காலை 9 மணிமுதல் சமூகவலைதளங்களுக்கான தடை தளர்த்தப்படுவதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind