பெண்களுக்கு 2 மடங்கு மன அழுத்தத்தை தரும் சமூக ஊடகங்கள்..அதிர்ச்சி ரிப்போர்ட்..!

share on:
Classic

சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை பயன்படுத்தும் இளைஞர்களில் ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வு கூறுகிறது.

சமூக ஊடகங்கள் Vs மன அழுத்தம் :

லண்டனில் 11,000 இளைஞர்களை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளே பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை செலவிடுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் வெறும் 4 சதவீத பெண்கள் தான் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதில்லை என்று கூறியுள்ளனர் . ஆனால் ஆண்களில் 10 சதவீதத்திற்கும் மேல் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதில்லை என்று கூறியுள்ளனர்  

 

பெண்களை துரத்தும் மன அழுத்தம்: 

அதேபோல் பெண்கள் தான் சமூக ஊடகங்கள் மூலம் மிரட்டலுக்கும் ,துன்புறுத்தலுக்கு ஆளாகி தூக்கத்தை தொலைக்கின்றனர் என்றும்  இதில்  பாதிப்பு ஆண்களுக்கு மிக குறைவே என்று கண்டறியப்பட்டுள்ளது. பல மணி நேரங்கள் ஆன்லைனில் கழிக்கும் பெண்கள் பலத்த மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என்று இந்த ஆய்வு.கூறுகிறது .
 

எதற்காக இந்த ஆய்வு :

இந்த ஆய்வின் முடிவுகளை வைத்து இளைஞர்கள் சமூக ஊடகங்களை  பயன்படுத்த வேண்டிய காலவரையறை முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. குடும்பங்களும் ,கல்வி நிலையங்களும் தான் இளைஞர்களை இந்த மாதிரியான சமூக ஊடங்களின் பிடியில் இருந்து விடுவிக்க உதவி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தபட்டுள்ளது. 

 

 

News Counter: 
100
Loading...

sankaravadivu