தோல்வியிலும் இப்படி ஒரு ஒற்றுமையா..?

share on:
Classic

லீக் சுற்று முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி வாய்ப்பை பெற்றன. இதில் இந்திய அணி நியூஸிலாந்து அணியுடனும்,  ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியுடனும் மோதியதின் முறையே நியூஸிலாந்து, இங்கிலாந்து  அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. 

உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் நிகழ்ந்த சில வினோதமான நிகழ்வுகள்:-

1.இந்திய அணி தொடக்கத்திலேயே 3  (3-3 ) விக்கெட்டுகளை இழந்தது. அது போலவே ஆஸ்திரேலியாவும் 3 விக்கெட்டுகளை (14-3) இழந்தது

2.49 வது ஓவரில் இந்திய அணி தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியா அணியும் 49 ஓவர்களில் ஆல் அவுட் ஆனது

3.ஆட்டத்தின் முக்கிய தருணத்தில் தோனி ரன்-அவுட் ஆனார். அதுபோலவே ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரர் ஸ்மித்தும் ரன் குவிக்க வேண்டிய முக்கியமான கட்டத்தில் ரன்-அவுட் ஆனார்

4.இந்தியா 216/8 ஆக இருந்தபோது தோனி ரன்-அவுட் ஆனார். ஆஸ்திரேலியா 217/8 என்ற நிலையில் ஸ்மித் ரன்-அவுட் ஆனார்.
இரண்டு ஆட்டங்களின் திருப்புமுனையாக அமைந்தது இந்த ரன் அவுட்களே!

5.இந்திய அணியில் 7 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களும், 4 பேர் இரட்டை இலக்க ரன்களும் சேர்த்தனர். அது போலவே ஆஸ்திரேலிய அணியில் 7 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களும், 4 பேர் இரட்டை இலக்க ரனகளும் சேர்த்தனர்.

News Counter: 
100
Loading...

Saravanan