நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சில முக்கிய டிப்ஸ்..!

share on:
Classic

சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில், நோயாளிகள் மட்டுமல்லாமல் அனைவரும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள்... 

நமது உடலால் நாம் சாப்பிடும் உணவிலிருந்து தேவையான சக்தியை எடுக்கவேண்டிய முறையில் எடுக்கமுடியாமலிருப்பதே, நீரிழிவு நோயாகும். உடலில் இன்சுலின் சுரக்காமலிருப்பதனால் அல்லது சுரக்கப்படும் இன்சுலின் தகுந்த முறையில் வேலை செய்யாமலிருப்பதனாலும் இது நடக்கிறது. இன்சுலின் ஒரு முக்கியமான ஹோர்மோன். அது உணவிலிருந்து உயிரணுக்கள் சக்கரைச் சத்தை உறிஞ்ச உதவி செய்வதற்கு தேவைப்படுகிறது. பின்பு உயிரணுக்கள் சர்க்கரைச் சத்திலிருந்து சக்தியை உண்டாக்குகின்றன. சில சமயங்களில் உயிரணுக்கள் இன்சுலினுக்குப் பிரதிபலிப்பைக் காண்பிக்காது. இதுவும் நீரிழிவு நோயை ஏற்படுத்தக் கூடும்.

என்ன சாப்பிடலாம்..? என்ன சாப்பிடக் கூடாது..?
நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது. அவர்கள் ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் சாப்பிடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவிலும், முட்டையில்  வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடலாம். பழவகைகளில் மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரிச்சை ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். மேலும், பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் போன்றவற்ரை சிறிதும் சேர்க்கக் கூடாது.

சர்க்கரை அளவு குறைய...!
சில வெண்டைக் காய்களை காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டு இரவு முழுக்க ஒரு கிளாஸ் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை தினமும் அருந்தி வந்தால், இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும்.

 
சூழ்நிலைக்கு ஏற்ப சில டிப்ஸ்...
ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுவதால் உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும் என்பதால் எச்சரிக்கை இருக்க வேண்டியது அவசியம். டயாபெட்டிஸ் உள்ளவர்கள் வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில், உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை-உப்பு கலந்த நீர் அல்லது இளநீர் குடிக்க வேண்டும்.

நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலையில் பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்தலாம். அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.

நீரிழிவு உள்ளவர்கள் காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்தல் வேண்டும். வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் 2 அல்லது 3 கொய்யா இலைகளை மெல்வது உபாயத்தை தரும்.

News Counter: 
100
Loading...

Ramya