தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!

share on:
Classic

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறை காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும். மேலும், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று முதல் அடுத்த 3 நாட்களில் வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசும். எனவே, பொதுமக்கள் 11 மணி முதல் மாலை 4 மணி வரை பாதுகாப்பாக பயணிக்கவும்,பயணங்களை தவிர்த்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan