கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை : பல்வேறு இடங்களில் தேர்தலை புறக்கணித்த மக்கள்..!!

share on:
Classic

அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி பல்வேறு பகுதிகளில் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். 

திருப்பூர் மாவட்டம் வெங்கிடாபுரம் 161-வது வாக்குச்சாவடியில் 1,091 வாக்குகள் உள்ளன. இது கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது. அங்கு நீர் நிலைகளை ஆக்கிரமித்து மின்மயானம் அமைக்கப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்ட மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் வெங்கிடாபுரம் வாக்குசாவடியில் இன்று காலையில் இருந்து யாரும் வாக்களிக்காததால், அங்கு ஒரு வாக்கு கூட பதிவாகாமல் உள்ளது. இதேபோல் அடிப்படை வசதிகள் இல்லை மற்றும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி கரூர் தொகுதிக்கு சங்கமரெட்டியபட்டி கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். விருதுநகர் தொகுதிகுட்பட்ட மீனாட்சிபுரத்தில் சாலை வசதி இல்லை என்று கூறி சுமார் 400 வாக்காளர்கள் தேர்தலை புறக்கணிப்பு செய்துள்ளனர். திருச்செங்கோடு, மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்களிப்பை மக்கள் புறக்கணித்துள்ளனர். 
 

News Counter: 
100
Loading...

Ramya