வெயில் காலத்தில் உடல் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ்..!!

share on:
Classic

கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் உடல் பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது.

உடலின் உஷ்ணத்தை தணிக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் பழங்கள் பெறும் பங்கு வகிக்கிறது. வெயில் காலங்களில் உடலின் சூட்டை தணிக்க உடலுக்கு ஏற்ற பழங்களை பற்றி பார்ப்போம்.

தர்பூசணி :
இந்த பழத்திற்கு தண்ணீர் பழம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. அதிக நீர் சத்து கொண்ட இந்த பழம் உடலின் சூட்டை வெகுவாக குறைக்கிறது. இதில் 94 சதவீதம் நீர் உள்ளது. இதில் பொட்டாசியம், வைட்டமின் எ மற்றும் சி அதிகம் நிறைந்துள்ளது. இதில் எந்த வித கலோரிகளும் இல்லாததால் இதயத்திற்கும், கண்ணுக்கும் நல்லது.

கிர்ணிப்பழம் :
தர்பூசணியை தொடர்ந்து கீர்ணிபழத்திலும் அதிக நீர் சத்து உண்டு. இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் பீட்டா கரோட்டின் கண்ணுக்கு சத்து அளிக்கிறது. மேலும், இதில் உள்ள வைட்டமின் எ மற்றும் வைட்டமின் சி அலர்ஜிகளை சரி செய்வதோடு சருமத்தை பொலிவடைய செய்கிறது.

நாவப்பழம் :
நாவப்பழம் மற்ற பழங்களை போலவே ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறந்த பழம். இதில் 1.41 மில்லி இரும்பு சத்து, 15 மில்லி கால்சியம் மற்றும் 18 மில்லி வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த பழம் இது. இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் மற்றும் அந்தோசியனிகள் புற்று நோயை குணப்படுத்தும் திறன் உள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan