தாயை கொன்றுவிட்டு சடலத்துடன் தங்கியிருந்த மகன்..புதுச்சேரியில் அதிர்ச்சி..!

share on:
Classic

புதுச்சேரியில் தாயை அடித்து கொன்றுவிட்டு சடலத்துடன் 4 நாட்கள் தங்கியிருந்த மகனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

புதுச்சேரி கிருஷ்ணா நகரை சேர்ந்த ஜெயமேரி என்பவர் மகன் அமலோற்பவநாதனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், தாயை அடித்து கொன்று விட்டதாக கூறி அமலோற்பவநாதன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். கொலை நடந்த இடம் லாஸ்பேட்டை பகுதிக்கு உட்பட்டதால் அவர் லாஸ்பேட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். 

போலீஸ் விசாரணையில், குடும்ப தகராறில் தாயை அடித்து கொலை செய்து விட்டு, சடலத்துடன் 4 நாட்கள் தங்கிருந்ததாக கூறி அதிரவைத்துள்ளார். நான்கு நாட்களும் ஓட்டலில் சாப்பாடு வாங்கி வந்து வீட்டில் சாப்பிட்டு தூங்கியதாக அமலோற்பவநாதன் கூறியுள்ளார். குடும்பத் தகராறில் தாயை அடித்து கொன்றுவிட்டு மகன் சடலத்துடன் 4 நாட்கள் தங்கியிருந்த சம்பவம் கிருஷ்ணா நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

News Counter: 
100
Loading...

sajeev