விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராததால் தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன்

share on:
Classic

காட்பாடி அருகே விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராத தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

காட்பாடியை அடுத்த கழிஞ்சூர் பகுதியை சேர்ந்த அஜித்குமார், விஸ்வாசம் படம் பார்க்க தந்தையிடம் பணம் கேட்டு சண்டையிட்டுள்ளார். தந்தை பாண்டியன், படம் பார்ப்பதற்கு பணம் கொடுக்கவில்லை.

இதனால் ஆத்திரத்தில் இருந்த மகன் அஜித்குமார், தூக்கிக்கொண்டு இருந்த தந்தை மீது பெட்ரோல் ஊற்றி தீ பற்ற வைத்துள்ளார். இதில், முகம் மற்றும் கையில் காயமடைந்த தந்தை பாண்டியன், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், அஜித்குமாரை கைது செய்தனர்.

News Counter: 
100
Loading...

sasikanth