தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க ரேபரேலி சென்றார் சோனியா காந்தி...

share on:
Classic

ரேபரேலி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற செய்த, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சோனியா காந்தி அத்தொகுதிக்கு சென்றுள்ளார்.

17-வது மக்களவைத் தேர்தலில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோல்வி அடைந்த நிலையிலும், ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட சோனியாகாந்தி தொடர்ந்து 5-வது முறையாக அமோக வெற்றி பெற்றார். இந்த நிலையில், தன்னை வெற்றி பெற செய்த கட்சி தொண்டர்களுக்கும், வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவிக்க சோனியா காந்தி இன்று ரேபரேலிக்கு சென்றுள்ளார். அந்த தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகளில் சோனியாவுடன், அவரது மகளும், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியும் பங்கேற்கிறார்.

News Counter: 
100
Loading...

Ragavan