ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம் : சோனியா, ராகுல் அஞ்சலி

share on:
Classic

ராஜீவ் காந்தியின் நினைவு காந்தி முன்னிட்டு சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.  

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர்கள் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28 வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

இதையடுத்து டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொது செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வத்ரா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மேலும், இவர்களோடு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி உள்ளிட்டோ கலந்து கொண்டு தங்களது அஞ்சலியை செலுத்தினர்.

 

News Counter: 
100
Loading...

aravind