தோனிக்கு ஆதரவாக களமிறங்கிய கங்குலி...

share on:
Classic

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோனி மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் பல விமர்சனங்களுக்கு ஆளானார். இந்நிலையில் அவருக்கு முன்னாள் வீரர் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார்.

சவுத்தாம்ப்டன் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி 52 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே எடுத்தார், அன்றைய ஆட்டத்தில் தோனி மெதுவாக ஆடியதால் பல விமர்சனங்களை எதிர்கொண்டார். 
இந்நிலையில், தோனிக்கு முன்னாள் வீரர் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார். தோனி ஒரு சிறந்த பேட்ஸ்மேன். ஒரு போட்டியை மட்டும் வைத்து தோனியை விமர்சிக்க கூடாது. இனி வரும் லீக் ஆட்டங்களில் அவர் சிறப்பாக செயல்பட்டு அவரின் மேல் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பார். சச்சின் உட்பட பலர் தோனியின் ஆட்டத்தை விமர்சித்த போது, கங்குலி தோனிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Saravanan