உலகக்கோப்பை : தென்னாப்பிரிக்கா அணியை துரத்தும் துரதிர்ஷ்டம்..!

share on:
Classic

தென்னாப்பிரிக்காவின் சோகம் இதுவரை நடந்த 11 உலகக்கோப்பையில் ஒரு முறை கூட உலகக்கோப்பை வென்றதில்லை

12-வது உலகக்கோப்பையானது இங்கிலாந்தில் மே-30ல் தொடங்கி ஜூலை 14-ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. தென்னாப்பிரிக்க அணி இந்த உலகக்கோப்பையை மிக மோசமாகவே தொடங்கியுள்ளது. இதுவரை 3 ஆட்டங்கள் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 3 ஆட்டங்களிலும் தோற்றுள்ளது. இதுவரை தென்னாப்பிரிக்கா உலகக்கோப்பை வரலாற்றியில் தொடர்ச்சியான 3 முறை தோற்று தனது மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது. 

முதல் ஆட்டம்

ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து அணியை எதிர் கொண்டது. அதில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 311 ரன்களை எடுத்தது. 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 207 ரன்களில் ஆட்டமிழந்து 104 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோற்றது. அந்த ஆட்டத்தில் ஆம்லாவுக்கு காயம் ஏற்பட்டு பாதியில் வெளியேறினார். பின்னர் ஆட்டத்தின் இறுதியில் வந்து பெரிதாக ரன் ஏதும் சேர்க்காமல் வெளியேறினார்.

இரண்டாவது ஆட்டம்

பங்களாதேஷ் அணியுடன் மோதியது ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 21 ரன் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியுடன் தோற்றது.  தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் 330 ரன்கள் சேர்த்தது. 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 309 ரன்களில் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 21 ரன் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியிடம் பணிந்தது.

தென்னாப்பிரிக்க அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் காயம் காரணமாக உலகக்கோப்பையில் இருந்து விலகினார், பங்களாதேஷ் அணியுடன் நடந்த ஆட்டத்தில் காயம் அடைந்த நிகிடி இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை என்பது தென்னாப்பிரிக்க அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக இருக்கும்.

மூன்றாவது ஆட்டம்

பலம் பொருந்திய இந்திய அணியுடன் மோதியதில் டாஸ் வென்ற  தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 227 ரன்களை குவித்தது. 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 47.3 ஓவரில் 230 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.. 

தனது 4-வது லீக் ஆட்டத்தில் பலம் பொருந்திய வெஸ்ட் இண்டீஸ் உடன் மோதியது. மழையின் காரணமாக போட்டி ரத்து செய்யபட்டதால் இரு அணிக்கும் தலா 1 புள்ளிகள் அளிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்கா உலகக்கோப்பை சேஸிங்கில் 14 முறை 300 ரன்களுக்கு மேல் அடித்து 1 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வெற்றி சதவிகிதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கே அதிகமாக இருந்தது.இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி ஆடி தோற்றிருந்தால் ஒரு புள்ளி கூட பெறாமல் உலகக்கோப்பை வாய்ப்பை இழந்திருக்கும். மழையின் காரணமாக 1 புள்ளி கிடைத்ததன் மூலம் இன்னும் உலகக்கோப்பை ரேஸிங்கில் நீடிக்கிறது.  

News Counter: 
100
Loading...

Saravanan