இம்ரான் தாஹிரின் சுழலில் சுருண்டது ஆப்கானிஸ்தான்..!

share on:
Classic

இம்ரான் தாஹிரின் சுழலில் சுருண்டது ஆப்கானிஸ்தான்..!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி, சோபியா காடர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற  தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் இருந்தபோது மழை குறுக்கிட்டதால், போட்டி 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது. மீண்டும் ஆட்டம் தொடங்கியதும் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற அந்த அணி, 34.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில், தென்னாப்பிரிக்க அணியின் இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகளும், மோரிஸ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர். இந்நிலையில் தென்னாப்பிரிக்கா 127 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.

News Counter: 
100
Loading...

Saravanan