உலகக்கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது தென்னாப்பிரிக்கா..!

share on:
Classic

உலகக்கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது தென்னாப்பிரிக்கா..

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் சோபியா காடர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற  தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் இருந்தபோது மழை குறுக்கிட்டதால், DLS முறைப்படி போட்டி 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது. மீண்டும் ஆட்டம் தொடங்கியதும் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற அந்த அணி, 34.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில், தென்னாப்பிரிக்க அணியின் இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகளும், மோரிஸ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர்.

தென்னாப்பிரிக்க அணி 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வீரராக ஆம்லா மற்றும் குயின்டன் டி கோக் களமிறங்கினர். குயின்டன் டி கோக் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், அதன் விளைவாக அணியின் ஸ்கோர் படிப்படியாக உயர்ந்தது. 28.4 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து தனது முதல் வெற்றியை பதிவு செய்தது தென்னாப்பிரிக்க அணி.

News Counter: 
100
Loading...

Saravanan