ரியல் எஸ்டேட் துறையில் முன்னிலை வகுக்கும் தென் இந்தியா...!!

share on:
Classic

வீடுகள் விற்பனையில் தென் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான அனராக் தெரிவித்துள்ளது.

2018-ம் ஆண்டு ரியல் எஸ்டேட் துறையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களுடனேயே காணப்பட்டது. தற்போது நாட்டின் ஒவ்வொறு பகுதியிலும் இத்துறை ஏற்றத்துடன் காணப்படுவதாக அனராக் நிறுவனத்தின் துணை தலைவர் சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார்.குடியிருப்புகள் மட்டுமல்லாது, சிறு வணிகம் மட்டுமல்லாது தொழில் அலுவலக பிரிவும் தென்இந்திய நகரங்களில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள விவரங்களின்படி, தென் இந்திய நகரங்களில் அலுவலகம் தொடர்பான ரியல் எஸ்டேட் விற்பனை 21 மில்லியன் சதுர அடியாக உள்ளது. ஆனால் தலைநகர் டெல்லியில் இப்பிரிவில் மொத்தமாகவே 6 மில்லியன் சதுர அடி மட்டுமே விற்பனை ஆகியுள்ளதாக தெரிவித்துள்ளது. தென் இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கு, முறைப்படுத்தப்பட்ட அணுகுமுறையும் வகுக்கப்பட்ட சட்டமும் தான் முக்கிய காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

aravind