தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புதென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

February 11, 2018 95Views
தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்திய அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி ஜோகன்னெஸ்பர்க் நகரில் நடைபெற்றது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் சதமடித்து அசத்தினார்.  தவானுடன் இணைந்து விளையாடிய கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்தார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்தது. 

பின்னர் தென்னாப்பிரிக்கா அணி விளையாடிய போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இரு முறை நிறுத்தப்பட்டது. இதன்பின், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி, தென்ஆப்பிரிக்காவிற்கு 28 ஓவரில் 202 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து  விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 25.3 ஓவரில், 5 விக்கெட்டுகளை இழந்து, 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இருப்பினும், 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3க்கு1 என்ற கணக்கில் இந்திய அணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.  இந்திய அணிக்கெதிரான நடப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி பதிவு செய்துள்ள முதலாவது வெற்றி இதுவாகும்.