U20 உலகக்கோப்பை கால்பந்து : தென் கொரியா, மாலி அணிகள் வெற்றி

share on:
Classic

20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் குரூப் சுற்று ஆட்டத்தில் தென் கொரியா, மாலி அணிகள் வெற்றி பெற்றன.

போலாந்தில் நடைபெற்ற  20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் குரூப் சுற்று ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - தென் கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அனல் பறந்த இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிரமாக போராடினர். ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் தென் கொரியா வீரர் கிம் முதல் கோலை பதிவு செய்து அசத்தினார்.

ஆட்ட நேர முடிவில் தென் கொரியா அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. இதேபோல் மற்றொரு ஆட்டத்தில் சவுதி அரேபியா அணியுடன் மாலி அணி மோதியது. இதில் 4 - 3 கோல் கணக்கில் மாலி அணி வெற்றிபெற்றது.
 

News Counter: 
100
Loading...

aravind