தாமதமாக தொடங்கும் தென்மேற்கு பருவமழை : கேரளாவில் ஜூன் 6-ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு..

share on:
Classic

தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 6ம் தேதி கேரளாவில் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் அதிகப்படியான மழை பொழிவை கொடுப்பது தென்மேற்கு பருவமழை காலம் தான். நாட்டின் ஒட்டுமொத்த மழைப்பதிவில் 70% தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் பதிவாகும். இப்படிப் பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1ம் தேதி தொடங்கி விடும். ஆனால், இந்த ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும் முன்னர் அதற்கான சாதக சூழல் அந்தமான் கடற்பகுதியில் தொடங்கும். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு மே 19 மற்றும் 20ம் தேதி தெற்கு அந்தமான் மற்றும் தென் கிழக்கு வங்க கடலில் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

Ramya