ஸ்பெயினில் தொடங்கிய காளைகளை விரட்டும் பாரம்பரிய திருவிழா..!

share on:
Classic

ஸ்பெயினில் ஆண்டுதோறும் நடைபெறும் காளைகளை விரட்டும் பாரம்பரிய போட்டி கோலாகலமாக தொடங்கியது.

ஸ்பெயின் நாட்டின் பாம்ப்லோனா நகரில் சான் பெர்மின் எனப்படும் வீதிகளில் காளைகளை விரட்டும் பாரம்பரிய திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழா நேற்று பாம்ப்லோனா நகரில் கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழாவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆடல், பாடலுடன் பாரம்பரிய விழாவை கொண்டாடினர்.

இந்த விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நல ஆர்வலர்கள் சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இந்த போட்டியில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக குற்றம்சாட்டிய அவர்கள், போட்டியை தடை செய்ய வேண்டும் என முழக்கம் எழுப்பினர்.

 

News Counter: 
100
Loading...

Ragavan