வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் சிறப்பு செலவின பார்வையாளர் நியமனம்..!

share on:
Classic

வேலூர் தொகுதியில் பண விநியோகம் தொடர்பான நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு செலவின பார்வையாளராக முரளி குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

வேலூர் நடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய முதல் நாளில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உள்பட 7 பேர் மனுத்தாக்கல் செய்தனர். தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் இன்று மனுத்தாக்கல் செய்கிறார். இதுவரை சுமார் 18 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

இந்த நிலையில், வேட்பு மனுத்தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். 19-ந் தேதி மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறுகிறது. 22-ந் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதனிடையே, வேலூர் தொகுதியில் பண விநியோகம் தொடர்பான நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு செலவின பார்வையாளராக முரளி குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind