மெட்ராஸ் வெஸ்ட் ரவுண்ட் டேபிள் 10 மற்றும் ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் பாரத் சார்பில் சிறப்பு ஒலிம்பிக்ஸ் 2019

share on:
Classic

மெட்ராஸ் வெஸ்ட் ரவுண்ட் டேபிள் 10 மற்றும் ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் பாரத் சார்பில் ஒருங்கிணைந்த சிறப்பு ஒலிம்பிக்ஸ் 2019சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிகழ்வில்  தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.மெட்ராஸ் வெஸ்ட் ரவுண்டு டேபிள் 10 - சிறப்பு ஒலிம்பிக்ஸ் சார்பில் நடத்தப்படும் இந்த விளையாட்டு நிகழ்ச்சிக்கு, எப்போதுமே வரவேற்பு உண்டு. நாட்டின் வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். முதல்முறையாக, மெட்ராஸ் ரவுண்டு டேபிள் 10 மற்றும் ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் சார்பில் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. நேபால், வங்கதேசம், பூட்டான் மற்றும்  இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான 30 சிறப்பு பள்ளிக்கூடங்களில் இருந்து 1500க்கும் மேற்பட்ட குழந்தைகள் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

நேற்றைய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பரிசுகளை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களுடன் பேசிய தமிழ்நாடு சிறப்பு ஒலிம்பிக் சங்கம் இயக்குனர் பால் தேவசகாயம் சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு தமிழக அரசு, அரசு வேலை வழங்கவும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்க வேண்டும் எனவும்  கோரிக்கை வைத்தார்.

News Counter: 
100
Loading...

aravind