’விஸ்வாசம் ‘அஜித்தின் பெண் ரசிகைகளுக்கு ஒரு ஸ்பெஷல் ட்ரீட்..!

Classic

அஜித் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் விஸ்வாசம் படத்தை காண அஜித்தின் பெண் ரசிகைகளுக்காக சிறப்பு காட்சி ஒளிப்பரப்ப உள்ளனர்.

அஜித்குமார் - இயக்குநர் சிவா 4-வது முறையாக கூட்டணி சேர்ந்த திரைப்படம் ‘விஸ்வாசம். மேலும், இப்படத்தில் நயன்தாரா, விவேக், தம்பிராமையா, ரோபோசங்கர் என மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளங்களே நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்திருக்கும் விஸ்வாசம் படத்தின் பாடல்கள், டீசர், ட்ரெய்லர் என வெளியான அனைத்தும் பட்டையை கிளப்பி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்று பெரிய எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியது. இப்படம் பொங்கல் விருந்தாக நாளை வெளியாகிறது

இந்நிலையில் ’தல’ அஜித்தின் பெண் ரசிகைகளுக்காக மேலும் ஒரு ஸ்பெஷல் ட்ரீட்டாக சென்னை திருநின்றவூர் ”வேலா சினிமாஸ்’ திரையரங்கத்தில் நாளை காலை 10.30 மணிக்கு  பெண்களுக்காகவே பிரத்யேகமாக ஒரு காட்சி ஒளிப்பரப்ப உள்ளனர். இதுவே பெண்களுக்காக முதல் முறையாக ஒளிப்பரப்பபடுகிற முதல் சிறப்பு காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

aravind