சுற்றுலா தளமான சைலன்ட் வேலியின் சிறப்பு...!!

share on:
Classic

நமக்கு சுற்றுலா என்றால் நம் நினைவுக்கு வரும் இடங்கள் ஊட்டி, கொடைக்கானல் தான். பெரும்பாலான மக்கள் விடுமுறை காலங்களில் அதிகம் போகக்கூடியவை இந்த இரண்டு இடங்கள் தான். தற்போது பெரும்பாலானோர்க்கு தெரியாத இந்த சைலன்ட் வேலியை பற்றி பார்கலாம். 

கோவையில் இருந்து 113 கி.மீ தொலைவில் கேரளாவின் எல்லை பகுதியில் உள்ளது இந்த சைலன்ட் வேலி உள்ளது. சைலன்ட் வேலிக்கு செல்ல வேண்டும் என்றால் கார் போன்ற வாகனங்களில் செல்ல முடியாது. ஜீப்பில் மட்டுமே செல்ல முடியும். காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செல்ல முடியும் . கேரளக் காடுகளில், யானைகளின் வழித்தடத்தின் இறுதி எல்லை சைலன்ட் வேலிதான் என்பதால், யானைகள் நடமாட்டம் இருக்கும். மலபார் அணில்கள், நாகப் பாம்புகள், மலைப் பாம்புகள், சிறுத்தைகள், புலி போன்ற கொடிய விலங்குகள்  உள்ள காட்டுப் பகுதி தான் இந்த சைலன்ட் வேலி. ரிசர்வ் ஃபாரஸ்ட் ஏரியா எல்லையின் முடிவில், 'கோர் ஃபாரஸ்ட்’ எனும் அடர்ந்த காட்டுப் பகுதி ஆரம்பமாகிறது. இங்கிருந்து நடந்துதான் செல்ல வேண்டும். மனதில் திடமும், கால்களில் வேகமும் உள்ளவர்களுக்கான ஏரியா இது. மனதில் திடமும், கால்களில் வேகமும் உள்ளவர்களுக்கான ஏரியாக உள்ளது.

இதை சுற்றியுள்ள அனைத்து பகுதியிலும் கேமரா உள்ளதால் காட்டு விலங்குகள் செய்யும் அட்டகாசங்களை காண முடிகிறது. இங்கு பல அரிய வகை மூலிகை தன்மை கொண்ட மரங்களும் உண்டு. இந்த் இடத்திற்கு உள்ளே சென்று வெளியே வர 3 மணி நேரமாகும். இந்த 3 மணி நேரம் த்ரில்லாக இருக்கும். கோவைதான் சைலன்ட் வேலிக்கு சென்டர் பாயின்ட். சென்னையில் இருந்து கோவைக்கு 503 கி.மீ. கோவையில் இருந்து சைலன்ட் வேலிக்கு 114 கி.மீ. ஆனைகட்டி, அட்டப்பாடி, முக்காலி வழியாக கிட்டத்தட்ட மூன்று மணி நேரப் பயணம். சைலன்ட் வேலியில் 'எக்கோ’ டூரிஸம் காட்டேஜ்கள் நிறைய உள்ளன. 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan